உக்ரைனில் ரஷ்யா கடந்த மூன்று நாட்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் இரு நாட்டு தரப்பிலும் பலர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனின் தெற்கில் உள்ள முக்கிய நகரமான Melitopol-ஐ ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்த அறிவிப்பை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Melitopol நகரை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்ய ராணுவம் கொண்டு வந்துள்ள நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம்.
எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை மேலும் இது எங்கள் நாடு என கூறியுள்ளார்.