உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்த ஜேர்மனி!

0

ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உதவியாக உக்ரைன் கோரிகை விடுத்திருந்த Marder IFV வானங்களை வழங்க ஜேர்மனி மறுப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு 100 Marder IFV காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதற்கான கீவின் கோரிக்கையை பெர்லின் நிராகரித்தது.

கடந்த புதன்கிழமை, உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 100 மார்டர் வகை IFV வாகனங்கள் மற்றும் பிற கனரக ஆயுதங்களைக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதற்கு, ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி Christine Lambrecht Reznikov உடனான தொலைபேசி உரையாடலில் கோரிக்கையை நிராகரித்ததாக உக்ரைனின் ஆதாரங்கள் தெரிவித்துள்ளது.

அதேவேளை முன்னதாக, ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் வெல்ட்டிடம் கியேவின் கோரிக்கையைப் பெற்றதை உறுதிப்படுத்தியது.

அனைத்து மார்டர் IFV-களும் நேட்டோ கடமைகளுக்குக் கட்டுப்பட்டவை.

எனவே இது குறித்து பிரச்சினைகள் நேட்டோவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் ஜெர்மனிய ஊடகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here