உக்ரைனின் அமுலுக்கு வரும் புதிய சட்டம்…

0

ரஷ்யாவின் ராணுவ டாங்கிகள் மற்றும் ஜெட் விமானங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு 75 லட்ச ரூபாய் முதல் ஏழரை கோடி ரூபாய் வரை வெகுமதி வழங்கப்படும்.

இதனை உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் ராணுவத்திடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் தங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தி கொள்ள முடியும்.

அவர்களுக்கு வெகுமதி வழங்க உக்ரைன் அரசு தயாராக உள்ளதாக துணை சபாநாயகர் கோர்னியன்கோ (Kornienko) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி போர் கப்பல் அல்லது போர் விமானத்துக்கு ஏழரை கோடி ரூபாயும், ஹெலிகாப்டருக்கு மூன்றே முக்கால் கோடி ரூபாயும், ராணுவ டாங்கிக்கு 75 லட்சம் ரூபாயும் வெகுமதி வழங்கப்படும்.

மேலும் ராணுவ கவச வாகனத்துக்கு சுமார் 38 லட்ச ரூபாயும், ராணுவ டிரக்கிற்கு ஏழரை லட்ச ரூபாயும் வெகுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here