ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என தகவல் வெளியானது!

0

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்போது சிறையிலுள்ள நௌபர் மௌலவியே என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தொடர்பில் தெளிவூட்டுவதற்காக கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாதங்களை ஊக்குவித்து சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினரை அடிப்படைவாதியாக மாற்றியமைப்பதற்காக நௌபர் மௌலவி செயற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here