இஸ்ரேல்- பாலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுக்கும் கனடா..!

0

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில்,

இனி பொதுமக்கள் உயிர்கள் பரிக்கப்படுவதில்லை என உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கக் கனடா பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து செயற்படும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அப்பாவிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான படங்களை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும். அதனால் தான் கனடா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ரொறொன்ரோ மற்றும் மொன்றியலில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here