இஸ்ரேலில் 2 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை இஸ்ரேலின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரு திரிபுகள் ஒன்றிணைந்து புதிய வகை வைரசாக உருமாறியுள்ளது.
அந்நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களின் மாதிரிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படு வருகின்றது.
மேலும், இந்த மாறுபட்ட திரிபு இன்னும் உலகம் முழுவதும் கண்டறியப்படவில்லை.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.