இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பேர் பலி

0
TOPSHOT - A ball of fire erupts from the Jala Tower as it is destroyed in an Israeli airstrike in Gaza City, controlled by the Palestinian Hamas movement, on May 15, 2021. - Israeli air strikes pounded the Gaza Strip, killing 10 members of an extended family and demolishing a key media building, while Palestinian militants launched rockets in return amid violence in the West Bank. Israel's air force targeted the 13-floor Jala Tower housing Qatar-based Al-Jazeera television and the Associated Press news agency. (Photo by Mahmud Hams / AFP)

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இத்தாக்குதல் தேவையானவரை தொடரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்களின் கட்டடங்கள் தரைமட்டமாகின.

வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவம், குறித்த கட்டடக் கோபுரத்தை முற்றாக அழித்துள்ளது.

காஸா பகுதியைத் தொடர்ந்து மேற்குக் கரை பகுதியிலும் இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரையில், நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 41 குழந்தைகள் உட்பட 145 பேர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பதற்றத்தைத் தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here