இவ்வருட ஐ.பி.எல். தொடர் விரைவில் நடைபெறும்….

0

2021 செப்டெம்பர் 15 முதல் ஒக்டோபர் 15 வரையான ஒரு மாத காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 14 ஆவது ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பங்கெடுத்த அணி வீரர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே கொவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர் மே 4 ஆம் திகதி போட்டிகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

பி.சி.சி.ஐ செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 க்கு இடையில் 14 ஆவது ஐ.பி.எல். தொடரின் எஞ்சியப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்காக நியூசிலாந்து அணியுடன் மோதுவதற்கு இந்திய அணி ஜூன் மாத நடுப் பகுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here