இளைஞர்களை மதுபானம் குடிக்க ஆர்வத்தை தூண்டும் நாடு!

0

ஜப்பானில் இளைஞர்கள் முந்திய தலைமுறையினரைவிடக் குறைவான அளவில் மதுபானம் அருந்துகின்றனர்.

அதனால் மதுபானம் மூலம் து கிடைக்கும் வரி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையை மாற்ற அந்நாட்டின் தேசிய வரி அமைப்பு “Sake Viva!” என்ற போட்டியை அறிமுகம் செய்துள்ளது.

மதுபானத்திற்கான தேவையை எப்படி அதிகரிப்பது என்பதே அந்தப் போட்டி ஆகும்.

அதன்படி 20 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட ஜப்பானியர்கள் அது தொடர்பான வர்த்தக யோசனைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிருமிப்பரவல் சூழலின்போது உருவான புதிய பழக்கவழக்கங்களும் மூப்படையும் மக்கள்தொகையுமே மதுபான விற்பனை சரிந்ததற்குக் காரணங்கள் என்று கூறப்படுகின்றது.

ஆரோக்கியமற்ற பழக்கத்தை ஊக்குவிப்பது குறித்து சில குறைகூறல்கள் எழுந்துள்ளது.

மேலும் போட்டியாளர்கள், அடுத்த மாத செப்டம்பர் 2022 இறுதிவரை யோசனைகளை முன்வைக்க முடியும் என தேசிய வரி அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here