இளைஞர்களால் நிரம்பிய ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு!

0

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து வாட்டுக்களும் நிரம்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுக்காக சிகிச்சைகளை வழங்கும் குறித்த வைத்தியசாலையில் நோயாளர்கள் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜனித்த ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பின்னணியில், இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்களுக்காக புதிதாக இரண்டு வாட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை முழுவதும் இளைய சமூகத்தினரே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, வேறு நோய் தாக்கங்கள் எதுவும் கிடையாது என கூறிய அவர், கொவிட் தொற்று மாத்திரமே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், முழு வைத்தியசாலை கட்டமைப்பையும் கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here