இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 25 வயது மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி…!

0

இந்தியா தமிழகத்தில் நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில் ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார்.

கூலித் தொழிலாளியான ராமச்சந்திரனுக்கு, பேட்டை அடுத்த அத்திமேடு பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை என்பவரின் 25 வயது மதிக்கத்தக்க மனைவி கவிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இது குறித்த விஷயம், சேர்மதுரைக்கு தெரியவர, அவர் மற்றும் குடும்பத்தினர் கவிதா பல முறை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கவிதாவும், ராமச்சந்திரனும் தலைமறைவாகியுள்ளனர்.

இவர்கள் இருவரை தொடர்ந்து தேடி வந்த போது, டவுன் ஸ்ரீராம் நகரில் இருவரும் தங்கியிருப்பது தெரிய வந்தது.

அப்போது, டவுன் குற்றாலம் சாலை அருகே கவிதாவும், ராமச்சந்திரனும் நடந்து வந்துள்ளனர்.

இதைக் கண்டு சேர்மதுரை வழிமறித்த போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சேர்மதுரை மற்றும் உறவினர்கள், இவர்கள் இருவரையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தினர்.

இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கபப்ட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசார் இச்சம்பவம் குறித்து கொலை வழக்காக பதிவு செய்து, சேர்மதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here