இளவரசி டயானாவின் சிலை திறப்பு…. நூற்றுக்கணக்கில் கூடிய மக்கள்….

0

பிரித்தானிய இளவரசியான மறைந்த டயானாவின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு லண்டனில் 01 ஆம் திகதி சிலை திறக்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஒரு கார் விபத்தில் டயானா உயிரிழந்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டது.

இந்நிலையில் லண்டனில் உள்ள கென்சின்ங்டன் ( Kensington ) அரண்மனை தோட்டத்தில் டயானாவின் சிலையை அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி ஆகிய இருவரும் திறந்து வைத்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக வில்லியமும் – ஹாரியும் பிரிந்திருந்த நிலையில், தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்று தங்களது தாயாரின் சிலையைத் திறந்து வைத்து, அவரைப் பற்றி நினைவுக்கூர்ந்தனர்.

மக்களின் இளவரசி என அழைக்கப்படும் டயானாவின் சிலை திறக்கப்பட்டதும், அதைக் காண்பதற்காக நூற்றுக்கணக்கில் மக்கள் கென்சிங்டன் மாளிகை முன்பு குவிந்துள்ளனர்.

எட்டு அடி உயரத்தில் நிற்கும் டயானாவின் அருகே, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் நிற்பது போல் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here