இளம் நடிகருக்கு வில்லியாகும் சிம்ரன்

0

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் “சர்தார்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாக படத்தின் மீதான ரசிகர்களின் பார்வையை கூர்மையாக்கியது.

இப்படத்தில் கார்த்திக் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று போலீஸ் கேரக்டர் என்றும், இன்னொன்று விஞ்ஞானி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படம் இதுவரை தமிழில் வெளிவராத கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த செம மாஸான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. ஆம், சர்தார் படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லியாக நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவரது காம்பினேஷனில் படம் பார்க்க எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இதற்கு முன்னர் சீமராஜா படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here