இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…!

0

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல உர வகைகளின் விலை குறையவுள்ளது.

உர இறக்குமதி நிறுவனங்கள் இதனை தீர்மானித்துள்ளன.

இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா ஒரு மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

50 கிலோகிராம் நிறையுடைய யூரியா உரம் ஒரு மூடை 29 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கைக்கான பல்வேறு உர வகைகளின் விலையானது ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

உர இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் நந்தன சமரகோன் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் உரத்திற்கான விலை குறைவடைந்தமையினாலேயே உரத்தின் விலை குறைக்கப்பட்டமைக்கான காரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here