இலங்கை வான்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3 விமானங்கள்

0

உக்ரேனில் புதுப்பிக்கப்பட்ட 3 அண்டனோவ் 32 (Antonov-32) ரக விமானங்கள், இலங்கை வான்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

2014 நவம்பர் மாதம் முதல் தற்போது வரையில், அந்த விமானங்கள், வான்படையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கவில்லை.

இதன் காரணமாக, போக்குவரத்துக்காக உலங்கு வானூர்திகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டிய நிலை வான்படைக்கு ஏற்பட்டது.

1995 ஆம் ஆண்டு, முதன்முறையாக, இலங்கை வான்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அண்டனோவ் 32 ரக விமானங்கள், யுத்த காலத்தில், பாரிய பங்களிப்பை வழங்கிய விமானங்களாகும்.

இந்நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட விமானங்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமையால், இலங்கை வான்படையின் போக்குவரத்து பலம், 75 சதவீதமளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here