இலங்கை வரும் அமெரிக்க அன்பளிப்பு கப்பல்!

0

இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்பட்ட இலங்கைக் கடற்படையின் P 627 கடல்சார் கண்காணிப்புக் கப்பல், நேற்று முன்தினம் 22 ஆம் திகதி சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தனவும் கப்பலை வரவேற்பதற்காக இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தார்.

பிலிப்பைன்ஸின் மணிலா துறைமுகத்திற்கு அழைக்கப்பட்ட பிறகு, P 627 கப்பல் அக்டோபர் 16 அன்று அங்கிருந்து தனது சொந்த பயணத்தை ஆரம்பித்தது.

இதனையடுத்து சுமார் 1393 கடல் மைல்கள் (2580 கிமீ) கடந்து 22 அக்டோபர் 2022 அன்று நிரப்புதல் மற்றும் சேவைகளுக்காக சிங்கப்பூரை சென்றடைந்தது.

இந்த நீண்ட கடல் பயணத்தின் போது, ​​P 627 கப்பல் இதுவரை பசுபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் சுமார் 50 நாட்களில் சுமார் 9093 கடல் மைல்கள் (16840 கிமீ) பயணம் செய்துள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here