கொழும்பு காலிமுகத்திடலில் ட்ரோன் மூலம் இலங்கையில் முதன் முதலாக நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று மாலை 6.30 மணியளவில் ஆரமாகி நடை பெற்றுள்ளது.
இதில் காலிமுகத்திடலில் சுமார் 150 ட்ரோன் வானில் பறக்கவிட்டு பல வண்ண வடிவங்களில் மின்குமிழ்கள் ஒளிரவிடப்பட்டது.
இவ்வாறான ஒரு கண்காட்சி இலங்கையில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது.
இக்காட்சிகள் இன்று 23.01.2022 ஆம் திகதியும் மீண்டும் இடம் பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான நிகழ்வானது புது அனுபவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.