இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக வங்குரோத்தாகிய அரசாங்கம்

0

அரசாங்கம் ஒன்று இலங்கை வரலாற்றிலே முதல்முறையாக வங்குரோத்து ஆனது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று மக்களுக்கு உணவு இல்லை, சிறுவர்களுக்குப் பால் இல்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு சீரழிந்துள்ளது என்றும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் பகுதிகளில் மனநல மருத்துவமனைகள் அமைக்குமாறு கேட்டுக்கொள்ளுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here