இலங்கை வந்தடைந்த ஜெர்மனிய போர் கப்பல்!

0

ஜெர்மனியின் போர் கப்பலான ‘பயர்ன்’ இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் இந்தப் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.

ஜெர்மனியின் ‘பயர்ன்’ போர் கப்பல் 1996ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது.

அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை கண்காணிப்பதற்கான வசதிகளும் அதி சக்தி வாய்ந்த ரேடார் கட்டமைப்பும் இதில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here