இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

0

இலங்கையில் வட்ஸ்அப் ஊடாக பரவி வரும் இணையதள தொடுப்பு (Link) தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவினால் இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்கில்ஸ் புட் சிட்டி தனது 40ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது என்ற விதத்திலேயே இணையதள தொடுப்பொன்று பகிரப்பட்டு வருகிறது.

எனினும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இணையத்தளத் தொடுப்பானது போலியானது என கார்கில்ஸ் புட் சிட்டி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை நெஸ்லே நிறுவனத்தின் பெயரிலும் இவ்வாறான இணையதள தொடுப்பொன்று பகிரப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

இவ்வாறான இணைப்புக்களை க்ளிக் செய்வதனூடாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கணினி அவசர உதவிப் பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரட்ணம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here