இலங்கை மீனவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்…

0

இலங்கையில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதை அடுத்து மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் நாளாந்தம் இன்னல்களை அனுபவிப்பதாக தெரிவித்து போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது மீனவர்களை பொலிஸார் தாக்கிய காணொளிகள் வெளியாகியுள்ளன.

மேலும் மீன் பிடி நடவடிக்கை தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ள 5,000 ரூபாய் தமக்கு போதாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மீன்பிடி வலைகள் போன்ற சொத்துக்கள் இந்த நெருக்கடியால் அழிவடைந்துள்ள நிலையில் இதற்கு மட்டுமே 20,000 க்கு மேல் செலவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here