இலங்கை மீனவர்கள் பயணித்த படகு மாலைதீவு கடற்பரப்பில் விபத்து – ஒருவர் மாயம்!

0

இலங்கை மீனவர்கள் பயணித்த படகு ஒன்று, மாலைதீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதில், ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேநேரம், ஐவர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இலங்கை மீனவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில், அதற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றினால், குறித்த ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

மாலைதீவு கடற்படை தொடர்பு மையம் இந்தத் தகவல்களை தமக்கு வழங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் கடலுக்கு சென்ற குறித்த படகில் பயணித்த மீனவர்கள், கடந்த மாதம் 15ஆம் திகதியின் பின்னர் தம்முடன் தொலைபேசிமூலம் தொடர்புகளைப் பேணவில்லை என்றும், அதுகுறித்து விசாரிக்குமாறும் படகின் உரிமையாளர் கடந்த 5ஆம் திகதி பேருவளை காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து, பேருவளை கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here