இலங்கை மீண்டெழ வழியென்ன? சம்பந்தன் புதிய யோசனை

0

இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமெனில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தன் தெரிவித்தள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல், தவறான நிர்வாகம் பிழையான முன்னுரிமைகளால் தற்போதைய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள போதிலும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அபிலாசைகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

தீர்வு காணப்படாத தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கு தீர்வு காண்பதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை புதிய முகத்தினை காட்ட முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here