இலங்கை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் சிக்கும் அபாயம்!

0

தடுப்பூசி செலுத்தப்படுதல் சிறந்த வேகத்தில் இடம்பெற்றுள்ள போதிலும் கொரோனா நோயாளர்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றதை சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் இருண்ட யுகத்திற்குள் சிக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதாரஅமைச்சின் அதிகாரி மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 176 கிசிச்சை நிலையங்கள் 30 வீதம் நிரம்பிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

இது எச்சரிக்கை மணியை அடிக்கின்றது,நிலைமை மோசமடையும் முன்னர் இதனை கட்டுப்படுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லாவிட்டால் நாடு கடந்தசில மாதங்களிற்கு முன்னர் காணப்பட்ட இருண்ட யுகத்தை நோக்கி செல்லக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here