இலங்கை மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல்போன நீல நிற கிளி….?

0

இலங்கையின் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 8 மாதங்களுக்கு முன்னர் நீல நிறத்திலான கிளி மாயமாகியுள்ளது.

தற்போது நீல நிறத்திலான கிளி கிடைத்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.

களுபோவில பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், இந்த கிளியை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுபோவில பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர், குறித்த கிளி பறந்து வந்தது.

உரிமையாளர் எவரும் வருகைத் தராமையினால் இதுவரை தாம் அந்த கிளியை பராமரித்து வந்துள்ளதாகவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த கிளி மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல்போன கிளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here