இலங்கை மற்றும் சில நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத் தடை விதிப்பு

0

பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத் தடை விதித்துள்ளது.

இன்று இரவு 11.59 மணி முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ள கோவிட் வழக்குகளின்அதிகரிப்பை கருத்தில் கொண்டே இந் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் குறித்த நாடுகளில் இருந்த அனைத்து நீண்டகால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் இனி சிங்கப்பூர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டு கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நாடுகளின் ஊடாக பயணம் செய்தவர்களுக்கும், சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் ஒப்புதல் பெற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திரும்பி வரும் சிங்கப்பூர் நாட்டவர்கள் மற்றும் இந்த நாடுகளுக்குச் சென்ற நிரந்தர குடியிருப்பாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here