இலங்கை மக்களை அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள்…

0

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் குள்ள மனிதர்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பரபரப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பதுளை, இரண்டாம் கட்டை, நெத்ராகம பிரதேசத்தில் கிராமத்தில் மீண்டும் குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்துள்ளது.

மாத்தறை, தெட்டமுன மீனவ கிராமத்தில் இதற்கு முன்னர் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியது.

அத்துடன் குளியாப்பிட்டிய, எலதலவ மற்றும் முனமுல்தெனிய ஆகிய பிரதேசங்களிலும், அநுராதபுரம் – மஹவிலச்சிய, எந்தகல்ல ஆகிய பிரதேசங்களிலும் அம்பாறை – தமன – தொட்டம பிரதேசங்களிலும் இதற்கு முன்னர் குள்ள மனிதர்கள் நடமாட்டம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறான சூழலில் பதுளை – இரண்டாம் கட்டை – நெத்ராகம பிரதேசத்தில் குள்ள மனிதர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பிரதேச வாழ் மக்கள் அச்சத்தில் இருப்பாக தெரிவித்துள்ளனர்.

பிரதேசங்களில் தோன்றும் குள்ள மனிதர்கள் பெண்களை துரத்துவதாகவும் அச்சுறுத்துவதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here