இலங்கை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

0

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்கலாமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியன் வடதிசை நோக்கி பயணிப்பதன் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று (05) தெல்வத்தை, பத்தேகம, தெதியவல, முலட்டியன, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் உடமலல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதனால் பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் கட்டாயமாக அதிக நீர் அருந்த வேண்டும் என திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலநறுவை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய பிரதேசங்களில் மக்களுக்கு உடலுக்கு உணரக்கூடிய கடுமையான வெப்பமான காலநிலை நிலவும்.

இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளியிடங்களில் வேலை செய்யும் மக்கள் அதிகமாக நீர் அருந்த வேண்டும். நிழல் உள்ள பிரதேசங்களில் மாத்திரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

வீட்டில் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகள்தொடர்பில் அவதானம் எடுக்க வேண்டும்.

கடினமாக வேலைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அல்லது இளம் நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும். மேலதிக தகவல்கள் அவசியமாக இருந்தால் 011-7446491 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி அறிந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here