இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் இன்று 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் இன்றைய தினம் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இன்றைய தினத்திற்கான நேரத்தை முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கான சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், குருநாகல், கம்பஹா, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்களில் இன்றைய தினத்திற்கான நேரத்தை முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கான சேவைகள் இடம்பெறும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here