இலங்கை மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள மற்றுமொரு விடயம்!

0

நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , இதற்கு தீர்வாக கொழும்பில் செயற்படும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் சமையல் எரிவாயுக்கு பதிலாக விறகு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மாற்று வழியாக மண்ணெண்ணெய் அடுப்பும் பயன்படுத்தப்படுவதாக தொழில் சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்ருக்ஷான் தாபரே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here