இலங்கை மக்களுக்கு நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை!

0

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருவதற்கு தாங்களே மருந்துகளை எடுத்துக்கொள்வதை நோயாளிகள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவர் உபுல்திசநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னர் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி மருந்துகளை பயன்படுத்தியதை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் மருந்துகள் பற்றிய பல தகவல்கள் வெளியாகின்றன என தெரிவித்துள்ள மருத்துவர் பரசிட்டமோலை மாத்திரம் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் ஒக்சிசன் அளவு குறைந்தால் வழங்கப்படும் Dexamethasone, மருந்தினை சிலர் பயன்படுத்தியுள்ளனர் இந்த மருந்தினை பயன்படுத்தினால் நுரையீரலில் கொரோனாவைரஸ் அதிகரிக்கும் ஆபத்துள்ளது இதன் காரணமாக உடலில் பல பிரச்சினைகள் உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு வெளியே கிசிச்சை பெறும் நோயாளிகளிற்கு இந்த மருந்தினை பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வேறு நோய்களால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வழமையாக மருந்துகளை பயன்படுத்தவேண்டும் எனவும் உபுல் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here