இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரண பொதி!

0

இலங்கையில் உள்ள அனைத்து சதோசை நிறுவனங்கள் ஊடாகவும் மக்களுக்கு நிவாரண பொதி ஒன்று பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

12 பொருட்கள் உள்ளடக்கப்பட்ட நிவாரண பொதி ஒன்று இன்று முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இந்த நிவாரணப்பொதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொதியில் அரிசி, மாவு, சீனி, பருப்பு, நெத்தலி ஆகிய அத்தியாவசிய 12 பொருட்கள் ஆயிரம் ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here