இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை! அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்

0

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் .

பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்களுக்குப் பதிலாக விவசாயிகளுக்கு
உரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்திருந்தால், நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவித்தார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்களுக்காக அரசாங்கம் 500 மில்லியன் டொலர்களை இலங்கை விமான சேவைகளுக்கு வழங்கியிருந்தது.

எனினும் நாட்டிலுள்ள 20 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு உரத்தை கொள்வனவு செய்வதற்கு 150 மில்லியன் டொலர்களே தேவைப்பட்டன. எனினும்
அதனை அரசாங்கம் செய்யவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர், பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது தெரிவித்தார்.

இலங்கைக்கு கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. உள்நாடு, வெளிநாடு சந்தைகளில் அரசாங்கம் கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. வரலாற்றில் முதன் முறையாக நாடு மேற்கண்ட காரணங்களால் வங்குரோத்து அடைய உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு என்னநடந்துள்ளது எனக் கேட்கிறார்கள். பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் அனைத்தும், முன்னர்
பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்தவே பயன்படுத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு கடன்பொறிக்குள் எதிர்காலத்தில் சிக்க உள்ளது. இதனால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும். கொத்தமல்லியில் இருந்து ஐபோன் வரையில் அனைத்தையும்
கறுப்பு சந்தைகளிலேயே பெற்றுக்கொள்ள முடிகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here