இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0

நாட்டினுள் அரசி, சீனி உட்பட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்களின் அத்தியாவசிய உணவு தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு உணவு பொருட்கள் அரசாங்கத்திடம் உள்ளதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய அளவு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை முழுமையாக நிராகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கும் தொழிலதிபர்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் உணவுப் பற்றாக்குறை குறித்து பயப்பட வேண்டாம் என்று அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here