இலங்கை மக்களின் சம்பளத்தில் 5% வரி அறவிடப்படுமா? அரசாங்கம் தெளிவுப்படுத்தல்

0

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததார்.

அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் வெளியிட்ட கூற்று தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிலவும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு அடுத்த வாரத்தின் பின்னர் இல்லாமல் போகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here