இலங்கையில் எதிர்வரும் 3 நாட்களுக்கு பெட்ரொல் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வாகன சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
23 ஆம் திகதியே பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. அதுவரையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அத்தியாவசிய காரணம் இன்றி வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை டீசல் விநியோகம் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்கள் அருகில் உள்ள இ.போ.ச டிப்போக்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள தேவையான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.