இலங்கை பொலிஸாரின் மற்றுமொரு கொடூர தாக்குதலால் சர்ச்சை!

0

ஹைலெவல் – மஹரகம – பன்னிபிட்டிய பிரதேசத்தில் நேற்று நபர் ஒருவர் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கொன்ஸ்டபிள் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளானார்.

பாரவூர்தியின் சாரதி மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோர் இன்றைய தினம் (30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட கொன்ஸ்டபிள் மற்றும் பாரவூர்தியின் சாரதி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறே, மற்றுமொரு பொலிஸ் அதிகாரியினால் நபரொருவர் தாக்கப்படுகின்றமை தொடர்பான புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் வீரவில காவல் பிரிவிற்குட்பட்ட பிரதேச மார்க்கமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here