இலங்கை பெண்ணொருவருக்கு இத்தாலியில் நடந்த கொடூரம்

0

இத்தாலியில் ரோம் நகரத்தில் வசித்து வரும் 40 வயதுடைய இலங்கை பெண்ணொருவரை அவரது கணவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் பேருந்து ஒன்று வரும் வரை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த போது அந்த இடத்திற்கு வந்த பெண்ணின் கணவருடன் வாய்த்தகராறு இடம்பெற்றுள்ளது.

இதன் முடிவில் 49 வயதுடைய கணவர் மறைத்து வைத்திருந்த ஆயுதம் ஒன்றில் மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் அ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் ஒரு வார காலமாக தனது கணவனை பிரிந்து வேறு ஒரு இடத்தில் வாழ்ந்துள்ளார்.

மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு கணவர் விடுத்த கோரிக்கையை மனைவி நிராகரித்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்த ஆயுதத்துடன் குறித்த இலங்கையரை அவ்விடத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here