இலங்கை பாராளுமன்ற சின்னமான செங்கோலுக்கு நடந்தது என்ன?

0

இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதியின்மைகளின் போது, இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சேதங்களை சரி செய்வதற்கான இயலுமை, உள்நாட்டில் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

செங்கோலில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், அதனை பிரித்தானியாவிலுள்ள அதன் தாய் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

எனினும், குறித்த சேதம் பாரிய சேதம் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here