இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டாம் என கோரிக்கை!

0

நாட்டில் தற்போது பாடசாலை திறப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்றும் இது குறித்து ஆராயும்படி அவர் வலியுறுத்தினார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் சினோபாம் அல்லது ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here