இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வெளியாகிய தகவல்!

0

இலங்கையில் கொரோனா வைரஸிற்கு எதிராக பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் குழு அதற்காக அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் குறிப்பிட்ட தரப்பினருக்கு தடுப்பூசி வழங்குவதே தங்கள் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here