இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்!

0

இலங்கை முழுவதும் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதிவரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டின் கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த 2 வாரங்கள் முழுமையாக நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே அமுலிலுள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here