இலங்கை பத்திரிகைகளில் வரும் திருமணம் விளம்பரங்கள்! பெண்களுக்கு எச்சரிக்கை!

0

இலங்கையில் பத்திரிகைகளில் வெளியாகும் திருமணம் விளம்பரங்கள் தொடர்பில் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெண்களை திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கடந்த இரு வருடங்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் இரானுவ வீரர், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பத்திரிகைகளில் வெளியாகும் திருமணம் தொடர்பிலான விளம்பரங்களை மையப்படுத்தி பெண்களுடன் சந்தேக நபர், தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தன்னை உயர் பதவியில் உள்ள ஒருவராக சித்திரித்து திருமணம் செய்துகொள்ளும் உறுதியை பெண்களுக்கு வழங்கியுள்ளார்.

அவ்வாறு குறித்த பெண்களுடன் நெருக்கமாக பழகியுள்ள சந்தேக நபர், தனது தாயாருக்கு புற்று நோய் எனக் கூறி அவர்களிடம் கைமாற்றுக்கு பணம் பெற்றுக்கொண்டு, அதனை திருப்பிக் கொடுக்காது இந்த மோசடிகளை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்த்த சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி. அதிகாரிகள் 2 வருடங்களின் பின்னர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here