இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் இரண்டாவது நாளாகவும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பதற்றமான சூழல் ஏறுப்ட்டுள்ளது.
நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்றலில் இருந்து இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸாரினால் அமைக்கப்பட்ட வீதித் தடைகளை தகர்த்து மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்நுழைய முற்பட்ட நிலையில் நேற்று அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் கண்ணீர் புகை மேற்கொண்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.