இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் புதிய சட்ட மூலம்….

0

இலங்கையில் புதிய சட்ட மூலத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்க திட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு முகக்கவங்களைத் தவிர்த்து, ஏனைய வகையில் முகத்தை மூடுவதை தடை செய்வதற்கான சட்டமே முன்வைக்கப்படவுள்ளது.

புதிய சட்ட மூலத்தை உடனடியாக முன்வைக்க உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாக காணப்படுகின்றது.

இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம்.

ஏப்ரல் 21 தாக்குதலால் இலங்கை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

இதுபோன்ற காரணங்களுக்காகவே முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here