இலங்கை நத்தார் பண்டிகை காலத்தில் முடக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு

0

நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது. இதில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை, எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை.

எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here