ஜேர்மனியில் இருந்து தமிழர்கள் 31 பேரை ஜேர்மன் அரசு நாடுகடத்தியுள்ளது.
அகதி தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை நாடு கடத்தும் செயற்பாடடிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேர்மன் Düsseldorf விமான நிலையத்தை முடக்கி போராட்டம் நடத்தப்பட்டது.
ஈழத்தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் Düsseldorf விமான நிலையத்தில் அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளை சேர்ந்த பலரும் தமிழர்களும் பங்கெடுத்து தமிழர்களை நாடுகடத்துவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நாடு கடத்துலுக்கு எதிராக, ஈழத்தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களில் பாரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக 3 நாட்கள் முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (மார்ச்-30) புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பவர்களை நாடுகடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த விமான நிலையத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 31 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாகவும், நான்கு தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தற்போது அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.