இலங்கை தமிழர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் உதவி!

0

மதுரையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மதுரை ஆனையூர் என்ற பகுதியில் சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கியுள்ளார். அவரது சார்பில் அவரது நண்பர்கள் இந்த பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் வெளியான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் மதுரையில் உள்ள இலங்கை தமிழர்கள் குறித்த காட்சிகள் வரும் நிலையில் தற்போது அவர் மதுரையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் ‘சீயான் 60’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here