இலங்கையில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டம்… 31 பேர் கைது

0

இலங்கையில் பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டம் அருகே தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இரு துறவிகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வெலிகட மற்றும் தலங்கம பொலிஸார் கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே மேற்கண்ட குழு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலம் கீழான ஒழுங்குவிதிகள் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையில், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், விரிவுரையாளர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இலங்கையில் உள்ள பிற குழுக்கள் இந்த சட்டமூலத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உயர்கல்வியை தனியார் மயமாக்க வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சும் உத்தேச கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here