இலங்கை ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யவின் வேண்டுகோள்

0

இலங்கையில் மீண்டும் சுற்றுலாத் துறை செயல்பட ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாத் துறைக்கு உதவ அனைவரும் வருகை புரிய வேண்டும் என ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை தற்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்த முன்னெடுத்துள்ளது.

இலங்கை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் அஸாம் அமீன் வெளியிட்டுள்ளார்.

நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி என தெரிவித்து முன்னாள் வீரர் குமார் சங்ககாராவை குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இலங்கை அணியின் ஜாம்பவான் வீரரான சனத் ஜெயசூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மீண்டு வரும் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு உதவ அனைவரும் வருகை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் மற்றும் குமார் சங்ககாராவுக்கு எனது நன்றிகள்’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here